பண்ருட்டியில் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்
பண்ருட்டியில் தொழில்முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சியை சேர்ந்த தொழில் சார்ந்த சமூக வல்லுநர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகா சிகாமணி, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணித் தலைவர் முருகன் வரவேற்றார். இதில் மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தையும், திட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் இளம்வல்லுநர்கள் கதிரவன், ஹெலன், ஜெனிபர், செயல் அலுவலர் சாமூண்டேஸ்வரி மற்றும் வட்டார பணியாளர்கள் மணிமாறன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பணியாளர் குணாளன் நன்றி கூறினார்.