பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
கோத்தகிரி அருகே பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை ஊராட்சியில் அமைக்கப்பட்ட 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில், தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கொணவக்கரை கிராமத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா தொடங்கி வைத்தார். முகாமில் சுய உதவிக்குழுக்களுக்கு தையல் பயிற்சி, மெழுகுவர்த்தி, சோப்பு எண்ணெய், பினாயில், சாக்லேட் தயாரித்தல், காளான் வளர்ப்பு உள்பட 30 வகையான தொழில் பயிற்சி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை, அதற்கு அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விளக்கப்பட்டது. வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுவின் முக்கியத்துவம், வங்கி கடன்கள், பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினர்.