பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம்


பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
x

கீழ் கோத்தகிரியில் பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமை கள இயக்குனர் சிங்கராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுவின் முக்கியத்துவம், வங்கி கடன்கள், பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினர். மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு தனி நபர் கடன் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு தொழில் தொடங்க அதிகபட்ச கடன் தொகை, அதற்கு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தொழிற் பயிற்சி இயக்குனர், வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் தேனாடு, கெங்கரை, அரக்கோடு, கடினமாலா ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story