சுற்றுச்சூழல் தின விழா
பவித்திரமாணிக்கத்தில் சுற்றுச்சூழல் தின விழா
திருவாரூர்
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்ட வனத்துறை சார்பில் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்கால் விளையும் தீமைகள், காடுகளின் பயன்கள் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்து மாணவ- மாணவிகளின் பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது. பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் திருவாரூர் வனச்சரக அலுவலர் எம்.சைதனி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.ஜெயந்தி, வனவர்கள் இந்துமதி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடைபெற்றது.
Related Tags :
Next Story