அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா


அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
x
தினத்தந்தி 6 July 2023 5:44 PM GMT (Updated: 7 July 2023 10:11 AM GMT)

கே.வி.குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித்துறை, தேசிய பசுமைப்படை ஆகியவை சார்பில் சுற்றுச்சூழல் தின விழா, பிளாஸ்டிக் குப்பைகள் ஒழிப்பு, மஞ்சப் பைகளை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியை (பொறுப்பு) இ.கெட்சி ஜெபசெல்வி தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் ஜி.சங்கீதா வரவேற்றார். உதவி தலைமே ஆசிரியர் டி.ஹேமலதா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் கே.சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட உதவி பொறியாளர் வி.சுஸ்மிதா, உதவி மேலாளர் டி.ராஜேந்திரபிரசாத், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.முரளீதர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் தமிழ் ஆசிரியர் ஜி.சீனிவாசன் நன்றி கூறினார்.

இதே போல, மாச்சனூர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேந்திரன், மேல்மாயில் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நா.ஜோதிநாதன் ஆகியோர் தலைமையில் சுற்றுச்சூழல் தின விழா, பிளாஸ்டிக் குப்பைகள் ஒழிப்பு, மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.


Next Story