டெங்கு காய்ச்சலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்-கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


டெங்கு காய்ச்சலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்-கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x

டெங்கு காய்ச்சலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரதீப்குமார் வலியுறுத்தினார்.

திருச்சி

டெங்கு காய்ச்சலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரதீப்குமார் வலியுறுத்தினார்.

கிராம சபை கூட்டம்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அதன் தலைவர் இந்திராணி கண்ணையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்று பேசும்போது, டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து அனுப்பி வைத்தால் அதற்கான நிதியை அரசிடம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

. கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர், துணைத்தலைவர் மணிமாறன், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.

இனாம் சமயபுரம்

இதேபோல், இனாம் சமயபுரம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் எஸ்.புதூர் ஏரிக்கரையில் அதன் தலைவர் மகாராணி தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி துணைத்தலைவர் அப்துல்லா நன்றி கூறினார்.

சிறுமியங்குடி

லால்குடி ஒன்றியம் சிறுமியங்குடி ஊராட்சி கிராம சபை கூட்டம் அதன் தலைவர் தனக்கொடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதூர் உத்தமனூர் ஊராட்சியில் தலைவர் நல்லம்மாள் தலைமையிலும், தச்சங்குறிச்சி ஊராட்சியில் தலைவர் தர்மராஜ் தலைமையிலும், பல்லபுரம் ஊராட்சிகளில் தலைவர் காமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

தா.பேட்டை ஒன்றியம்

தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் வரவு, செலவு கணக்குகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.


Next Story