சுற்றுச்சூழல்- சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுற்றுச்சூழல்- சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் தஞ்சை பிரிவின் சார்பில் வடுவூர் அருகே உள்ள கருப்பு முதலியார் கோட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல்-சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராமத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சை கள விளம்பர துறை அலுவலர் ரவீந்திரன், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரணி ஆகியோர் கலந்துகொண்டு சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பேசினர். முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.