சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
களக்காட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் 30-வது ஸ்தோத்திர பண்டிகை தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சேகர குரு சந்திரகுமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பசுமையை வலியுறுத்தும் வகையில், ஆலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் பச்சை நிற ஆடை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து களக்காடு அண்ணாசாலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சபை ஊழியர்கள் ஜெடியா தங்ககுமார், சுஜின், பிரின்ஸ், ஜெயசிங், சுந்தர்ராஜ், தங்கராஜ், பாக்கியராஜ், பால் பொன்னையா மற்றும் சேகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story