பக்தர்கள் விட்டுச்செல்லும் துணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு


பக்தர்கள் விட்டுச்செல்லும் துணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 9:04 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளியங்கிரி மலையில், ஆண்டி சுனையில் குளித்துவிட்டு பக் தர்கள் விட்டுச்செல்லும் துணியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

வெள்ளியங்கிரி மலையில், ஆண்டி சுனையில் குளித்துவிட்டு பக் தர்கள் விட்டுச்செல்லும் துணியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை

கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில் 7-வது மலை உச்சியில் சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலை ஏறி செல்கிறார்கள். எனவே மலைப்பகுதியில் ஒருமுறை பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது.

வெள்ளியங்கிரி மலையேற மார்ச், ஏப்ரல் மாதங்களில் வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மேலும் சித்ரா பவுர்ணமி யையொட்டி மே 31-ந்தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக் கப்படுகிறார்கள்.

வெள்ளியங்கிரி மலையேற தமிழ்நாடு மட்டு மின்றி மற்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

வெள்ளியங்கிரியில் 6-வது மலையில் ஆண்டி சுனை ஓடை உள்ளது. மலையேறும் பக்தர்கள் அந்த சுனையில் வரும் குளிர்ச்சி யான நீரில் குளித்து விட்டு தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்கிறார்கள்.

சுனையில் குளிக்கும் சிலர் தங்கள் ஆடைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இதனால் மலையில் பல இடங்களில் ஆடை மற்றும் துணிகள் கிடக்கிறது. இதனால் மலையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே அங்கு ஆடைகளை போட கூடாது என்று தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதை பலரும் கண்டு கொள்ளாத நிலையே உள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறும்போது, ஓடை யில் துணிகளை போடக்கூடாது. ஆனாலும் சிலர் துணிகளை போட்டு செல்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்றனர்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு நிர்வாகி காளிதாஸ் கூறும்போது, வெள்ளியங்கிரி மலைப்பகுதியை சூழலியல் வனப்பகுதியாக அறிவிக்க முன்மொழிவு நீண்டநாளாக நிலுவையில் உள்ளது.

மலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பக்தர்களின் கடமை ஆகும். இயற்கைக்கு எதிரானது, கடவுளுக்கு எதிரானது என்பதை பக்தர்கள் உணர வேண்டும் என்றார்.


Next Story