ஏ.ஆர்.டி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை


ஏ.ஆர்.டி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
x

சென்னையில் ஏ.ஆர்.டி நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை

சென்னை முகப்பேர் மேற்கு, வள்ளலார் சாலையில் ஏ.ஆர்.டி. என்ற பெயரில் நகைக்கடை, சீட்டு கம்பெனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அண்ணா நகர், நொளம்பூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோடி கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு சொன்னபடி வட்டியையும், அசலையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவன பெண் ஊழியரான பிரியா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து நொளம்பூர் போலீஸ் மற்றும் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து மோசடி செய்த ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story