இ.பி.எப். குறைதீர்க்கும் முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன


இ.பி.எப். குறைதீர்க்கும் முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன
x

இ.பி.எப். குறைதீர்க்கும் முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன

நாகப்பட்டினம்

வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப். தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மண்டல இ.பி.எப். முதன்மை ஆணையர் முருகவேல் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் முகாம் இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடைபெற்றது. முகாமை நாகை மாவட்ட இ.பி.எப். ஒருங்கிணைப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். முகாமில் செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விவரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர் சரவணன் மனுதாரர்களிடம் தெரிவித்தார். இந்த முகாமில் 100- க்கும் மேற்பட்டதொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story