சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்துள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்...!


சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்துள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்...!
x
தினத்தந்தி 9 Jan 2023 5:08 AM GMT (Updated: 9 Jan 2023 5:16 AM GMT)

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்றனர்.

சென்னை

சென்னை,

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

அதில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். அதிமுக பொதுக்குழு வழக்கு, மாநில தேர்தல் ஆணையத்தின் இரட்டை தலைமை கடிதம் போன்ற உள்கட்சி பிரச்சனை அதிமுகவில் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆண்டில் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று அருகருகே அமர்ந்துள்ளனர்.


Next Story