மூன்று மதத்தினர் பங்கேற்ற சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா


மூன்று மதத்தினர் பங்கேற்ற சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
x

மூன்று மதத்தினர் பங்கேற்ற சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

சேலம்

சேலம் கோட்டை பகுதியில் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் நேற்று சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கோவிலில் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் செய்து பூஜை செய்யப்பட்டது. பாரதி உரிமைகள் அறக்கட்டளை மற்றும் 'கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன்' சார்பில் நடந்த இந்த பூஜையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிறுவனர் பூபதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சுகவனேஸ்வரர் நற்பணி பேரவை தலைவர் மணிசேகர், அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், சித்தரசு சுவாமி, மாநகராட்சி கவுன்சிலர் மூசா, சிராஜிதீன், சேலம் வரலாற்று சங்க பொதுச்செயலாளர் பர்னபாஸ், பிரின்ஸ், சேவியர், சதாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விநாயகருக்கு சமத்துவ பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story