சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
குத்தாலம்:
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஊட்டி, அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.