சின்னசேலம் பேரூராட்சியில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
சின்னசேலம் பேரூராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
சின்னசேலம்,
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தலின் பேரில் சின்னசேலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அலுவலர்கள், ஊழியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த விழாவில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராகேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் காந்தி, நாகராஜன், அரசு, சாரங்கன் ஹபீபா சிராஜிதீன், உமா ஜெயவேல் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.