சமத்துவ மக்கள் கட்சியினர் கைது


சமத்துவ மக்கள் கட்சியினர் கைது
x

விருதுநகரில் சமத்துவ மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு சிவகாசியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் அக்கட்சியினர் காமராஜர் சிலை அருகில் தடையை மீறி போராட்டம் செய்ய முயன்றனர். இந்த போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநில நிர்வாகி விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் 36 பெண்கள் உள்பட 86 பேர் கலந்து கொண்டனர். உரிய அனுமதியின்றி போராட்டம் செய்ய முயன்ற சமத்துவ மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.



Related Tags :
Next Story