சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
நெல்லை டவுனில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் வாகையடி முக்கில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் அகற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மது, புகையிலை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் மது ஒழிப்பு தொடர்பாக கட்சி தலைவர் சரத்குமார் எழுதிய கடிதம் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
Related Tags :
Next Story