சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:15:27+05:30)

பூம்புகார் கலைக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை

பூம்புகாரில் சிலப்பதிகாரத்தை போற்றும் வகையில் கலைக்கூடம் அமைந்துள்ளது. தமிழர்கள் பண்டிகையான பொங்கல் விழா பூம்புகார் கலைக்கூடத்தில் நடந்தது. விழாவிற்கு பூம்புகார் சுற்றுலா அலுவலரும், மாவட்ட சுற்றுலா அலுவலருமான அரவிந்தகுமார் தலைமை தாங்கினார். விழாவை காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தொடங்கி வைத்தார். இதில் பாரம்பரிய கலைகளான மேளம், கரகாட்டம், மயிலாட்டம், காவடி மற்றும் கோலம் வரைதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.


Next Story