யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள்
யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தேசூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தெள்ளார் வட்டார மருத்துவர் ஹித்தேன் திஷா, தேசூர் ஆரம்ப சுகாதார நிலைய, டாக்டர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார்
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு அன்ன கூடை, துண்டு, சோப்பு உள்பட உபகரணங்கள் வழங்கப்பட்டு மேலும் யானைக்கால் நோயில் பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான மருந்து வழங்கப்பட்டது. இதில் செவிலியர்கள் ரேணுகா, சீதாசெல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story