அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள்
அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு இந்தியன்வங்கி சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கியின் 116-வது நிறுவன நாள் மற்றும் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு சமூக பங்களிப்பு நிதியிலிருந்து வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் வங்கி வேலூர் மண்டல மேலாளர் பிரசன்ன குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் வரவேற்றார்.
விழாவில் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு எழுது பலகை, இரும்பு அலமாரி, மாணவர்களுக்கு தேர்வு அட்டை, கலர் பென்சில் மற்றும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபடுதலை தவிர்க்க பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக ஊர் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.
விழாவில் இந்தியன் வங்கி வாணியம்பாடி கிளை மேலாளர் உமேஷ் சகமா, மண்டல முதுநிலை மேலாளர் ஜீவகனிசெல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், துணை தலைவர் தேவராஜ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.