ரூ.7½ லட்சத்தில் உபகரணங்கள்


ரூ.7½ லட்சத்தில் உபகரணங்கள்
x

விழுப்புரம் அரசு பள்ளிக்கு ரூ. 7½ லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7½ லட்சம் மதிப்பில் 100 மேஜைகள், பெஞ்சுகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேஜை, பெஞ்சுகளை பள்ளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற தலைவர் சக்கரைதமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், புல்லட் மணி, பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் குமார், அசார், வார்டு செயலாளர் ரகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story