800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

கரியகோவில் மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்

கருமந்துறை மலைப்பகுதியில் தொடர்ந்து சாராயம் ஊறல் போட்டு காய்ச்சுவதும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதும் நடைபெறுவதால், கருமந்துறை, கரியகோவில் போலீசார் நாள்தோறும் அதிரடியாக மதுவிலக்கு வேட்டையில் இறங்கி ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். அதன்படி கரியகோவில் போலீசார், பாச்சாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ஊறல் போட்டு சுமார் 800 லிட்டர் சாராயத்தை பேரல்களில் பதுக்கி வைத்திருந்ததை கருமந்துறை போலீசார் கண்டுபிடித்து அதை கொட்டி அழித்தனர்.


Next Story