ஓவியங்கள் மை ஊற்றி அழிப்பு


ஓவியங்கள் மை ஊற்றி அழிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் மை ஊற்றி அழிக்கப்பட்டன.

கோயம்புத்தூர்

கோவை

கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் மை ஊற்றி அழிக்கப்பட்டன.

மேம்பால தூண்களில் ஓவியங்கள்

கோவை காந்திபுரத்தில் உள்ள மேம்பால துண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் படிக்கும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளது. எனவே அந்த தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தூண்களில் வரலாற்று ஓவியங்கள் வரைய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு மனுநீதி சோழ மன்னன், கண்ணகி, சிலப்பதிகார காட்சிகள் உள்ளிட்ட ஓவியங்களை வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மை ஊற்றி அழிப்பு

இந்த நிலையில் நேற்று மாலை சிலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதிகளில் 4 தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் மீது கருப்பு நிற மையை ஊற்றி அழித்தனர்.

இதற்கிடையே விஸ்வஜன முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகி வேல்முருகன், ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், காந்திபுரம் மேம்பால தூண்கள் பகுதியில் விஸ்வகர்மா சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. எனவே அவற்றை நாங்கள் மை ஊற்றி அழித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story