எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்-சேலம் வழியாக இயக்கப்படுகிறது
எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06044) வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06043) வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் பெரம்பூரில் நின்று செல்லும்.
இந்த தகவல் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,