ஈரோடு: அருள்மிகு மஹாமாரியம்மன், திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஈரோடு:  அருள்மிகு மஹாமாரியம்மன், திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கொடுமுடி அருகே அருள்மிகு மஹாமாரியம்மன், திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு


ஈரோடு மாவட்டம், கொளாநல்லி கிராமம் சத்திரப்பட்டியில் மிகவும் பழமையான மஹாமாரியம்மன், திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கடந்த புதன்கிழமை ஸ்ரீ கணபதி வழிபாடு, கோபூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.அன்று இரவு முதற்காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் காலயாக பூஜை, மூல மந்த்ரஹோமம், ஸ்ரீ மஹாமாரி ஸஹஸ்ரநாம ஹோமம் , பூர்ணாஹூதி தீபாராதனை,பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை ஆறு மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று காலை யாகபூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்த்ர ஹோமம், நாடி சந்தானம், திரவிய ஹோமம், நான்காம் காலயாகபூஜை , கடம் ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி முதலியன நடைபெற்றது.காலை ஆறு மணிக்கு மேல் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ மஹாமாரியம்மன் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து ஏழு மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ திரெளபதி அம்மன் கோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.


Next Story