ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
x

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிருகிறது. இதேபோன்று இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே அறிவித்தார்.

ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று மாலை 4 மணி அளவில் ஓ.பி.எஸ் சந்திக்க உள்ளார்.


Next Story