ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் விற்பனை களைகட்டியது


ஈரோடு மாட்டுச்சந்தையில்  வெளிமாநில வியாபாரிகள்   வருகையால் விற்பனை களைகட்டியது
x

ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் விற்பனை களைகட்டியது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் 250 எருமை மாடுகள், 350 பசு மாடுகள் என மொத்தம் 600 மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதேபோல் 100 கன்றுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் கன்று குட்டிகள் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பசு மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும் விலைபோனது. வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக வந்ததால், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story