ஈரோடு மாநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்


ஈரோடு மாநகர் பகுதியில்  விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
x

ஈரோடு மாநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் எந்தெந்த பகுதிகளில் வைக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் கூறியதாவது:-

ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 22 இடங்களிலும், சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 56 இடங்களிலும், தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 61 இடங்களிலும், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 130 இடங்களிலும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 58 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலம்

இங்கு ஒலிபெருக்கி வைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். மேலும் 3-ந்தேதி அன்று விநாயகர் சிலை ஊர்வலம் ஈரோடு சம்பத் நகர் பிரிவில் இருந்து தொடங்கி பெரியவலசு, முனிசிபல் காலனி ரோடு, மேட்டூர் ரோடு, காமராஜர் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர் வழியாக சென்று காவிரி ஆற்றை சென்றயடைய உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு போலீசார், 'கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாநகர் பகுதியில் எந்தெந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதோ அதே இடத்தில் மீண்டும் வைத்து கொள்ளலாம். மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்' என்றனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம், கோமதி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story