ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ரங்கோலி கோலம்


ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில்  செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ரங்கோலி கோலம்
x

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ரங்கோலி கோலம் நடந்தது.

ஈரோடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரங்கோலி கோலம் வரைந்தனர்.

இதை, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு, செஸ் போர்டு வடிவில் வடிவமைக்கப்பட்ட கேக்கினை வெட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story