ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 2 நாட்களில் நிலைப்பாடு அறிவிக்கப்படும்- பாஜக
, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது.
சென்னை,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குக் பேட்டி அளித்த பாஜக துணைத்தலைவர் நாராயண் திருப்பதி, பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார். மேலும் இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்த நாராயண் திருப்பதி இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்றும் கூறினார்.
Related Tags :
Next Story