ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: த.மா.கா போட்டியா?: ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் சந்திக்கின்றனர்..!!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: த.மா.கா போட்டியா?: ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் சந்திக்கின்றனர்..!!
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள், இன்று காலை 11 மணிக்கு த.மா.கா. தலைவர் வாசனை சந்திக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் த.மா.கா. போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நெருக்கடி த.மா.கா.வுக்கு உள்ளது.

கடந்த தேர்தல் நிலவரம்...

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தனக்கு அடுத்தபடியாக வந்த த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஒட்டு விவரம்

திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), - 67,300

யுவராஜா (தமாகா) - 58,396

கோமதி (நாம் தமிழர் கட்சி) - 11,629

ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10,005

நோட்டா - 1,546

முத்து குமரன் (அமமுக) - 1,204

ஆறுமுக கண்ணன் ( ஏபோல்) - 373

கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ்) - 372

மீனாட்சி (சுயேச்சை) - 299

ஷாஜகான் (சுயேச்சை) - 256

யுவராஜ் (சுயேச்சை) - 235

சண்முகவேல் (எம்.ஜி.எம்.கே.) - 151

ராஜா (எம்.டி.எம்.கே.) - 102

அந்தோணி பீட்டர் (சுயேச்சை) - 96

மின்னல் முருகேஷ் (சுயேச்சை) - 73

பெண் வாக்காளர்கள் அதிகம்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள நிலையில், சென்னையில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்கு 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713, பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 23 பேர் உள்ளனர். எனவே இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

இந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.



Next Story