ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி அ.தி.மு.க. சார்பில் 111 பேர் குழு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்சியின் அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.
பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில், முக்கியமானவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் அமைச்சர்கள்
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சி.பொன்னையன், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., கொள்கை பரப்பு துணை செயலாளர் மா.பா.பண்டியராஜன், அமைப்பு செயலாளர் பி.தங்கமணி.
தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி. தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார். அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, என்.தளவாய் சுந்தரம், செல்லூர் கே.ராஜூ, ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், எஸ்.கோகுல இந்திரா, எம்.சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பென்ஜமின், வி.கருப்பசாமி பாண்டியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எஸ்.கே.டி.ஜக்கையன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வி.வி.ராஜன் செல்லப்பா, நா.பாலகங்கா, சி.த.செல்லப்பாண்டியன்.
வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்
விவசாய பிரிவு செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன்.
அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கட்சி நிர்வாகிகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கட்சி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.