ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு பஸ்களும் அவ்வப்போது நடுரோட்டில் முடங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மதியம் 2.15 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறைக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் வந்தபோது பழுது ஏற்பட்டது. தொடர்ந்து பஸ்சை ஓட்ட முடியாமல் டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்தினார். நடுரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிரைவர் தீவிரமாக முயற்சி செய்தும் பஸ்சை இயக்க முடியவில்லை. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் பழுதடைந்து பாதி வழியில் நிறுத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இது பயணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.