ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய லாரி
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை குழிக்குள் லாரி சிக்கியது.
ஈரோடு
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது. ரோட்டின் ஒரு புறம் குழாய் பதிக்கப்பட்டு குழி மூடப்பட்டது. மறுபுறம் குழி தோண்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த வழியாக தார்ரோடு போடுவதற்காக தார் மற்றும் ஜல்லி கலவையை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, பாதாள சாக்கடை குழி தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமல் இருந்ததால் குழிக்குள் சிக்கியது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த தார், ஜல்லி கலவை டிராக்டருக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதன் காரணமாக கிருஷ்ணம்பாளையம் பகுதியில் நேற்று பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story