ஈரோட்டில் மாரத்தான் போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் மாரத்தான் போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

ஈரோட்டில் மாரத்தான் போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட பிரிவு சார்பில் உடல் தகுதியை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பெயரில் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி சத்திரோடு வழியாக சென்று சூளை, கனிராவுத்தர்குளம், தண்ணீர் பந்தல் பாளையம் ஆகிய 3 இடங்களில் நிறைவடைந்தது.

இதில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடத்தப்பட்டது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வமாக கலந்துகொண்டு ஓடினர்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4-வது முதல் 10-வது இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


Next Story