ஈரோடு பெரியார் நகர்கருப்பண்ண சாமி கோவிலில் பொங்கல் விழா


ஈரோடு பெரியார் நகர்கருப்பண்ண சாமி கோவிலில் பொங்கல் விழா
x

ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ண சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு பெரியார் நகர் பொய்யேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற கன்னிமார், கருப்பண்ணசாமி, முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பஞ்சமுக கணபதி, கன்னிமார் சாமிகள், ஏரி கருப்பராயனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து முனியப்பனுக்கு அசைவ படையல் பூஜையும், மாலையில் ஏரி கருப்பராயன் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


Next Story