ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும்  கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Oct 2023 2:02 AM IST (Updated: 19 Oct 2023 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஈரோடு

ஈரோடு அருகே உள்ள ரகுபதிநாயக்கன்பாளையம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-ஈரோடு ரெயின்போ கார்டன் ஜீவானந்தம் வீதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு கழிவு நீர், மழைநீர் வடிகால் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் வயல்வெளி நீர் எங்கள் பகுதியில் உள்ள கால்வாய் வழியாக சென்றது. ஆனால் தற்போது அருகே உள்ள விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் எனக்கருதி கழிவுநீர் கால்வாயை சுவர் வைத்து அடைத்து விட்டனர். எனவே குடியிருப்பு கழிவுநீர், மழை நீர், சுற்றுப்புற கிராமங்களின் வயல்வெளி நீர் செல்ல வழிஇன்றி, குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து, எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story