ஈரோடு சோலார் பஸ் நிலையம் தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


ஈரோடு சோலார் பஸ் நிலையம்   தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்  மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
x

ஈரோடு சோலார் பஸ் நிலையம் தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோடு சோலார் பஸ் நிலையம் தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்காலி பஸ் நிலையம்

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பே தற்காலிக பஸ் நிலையம் தயாரானது. ஆனால் இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தற்காலிக பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஈரோடு சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 23 ஏக்கர் பரப்பளவில் ரூ.63½ கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடக்கிறது. தற்காலிக பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சாலை, பயணிகள் நிழற்கூடை, கழிப்பறை ஆகியன அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் நிற்கும் இடங்களில் அதன் வழித்தட விவரங்களின் பெயர் பதாகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

காலஅவகாசம்

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், திருச்சி, வெள்ளக்கோவில், மூலனூர், திண்டுக்கல் போன்ற வழித்தடங்களில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை சோலார் பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு அவர்களது கருத்துகளும் கேட்கப்பட்டன.

ஈரோடு மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கால அவகாசம் வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்கு பயணிகள் சென்று வருவதால், புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் சிரமம் ஏற்படும். எனவே தற்காலிக பஸ் நிலையம் தீபாவளி பண்டிகைக்கு பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story