ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்  கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x

மின்கட்டண உயர்வு

ஈரோடு

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். சமையல் எரிவாயு விலையில் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பவானியில் அந்தியூர் பிரிவு சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், பவானி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். பெருந்துறை தொகுதி எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., பவானி நகர செயலாளர் சீனிவாசன், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் மேகநாதன், பவானி ஒன்றிய குழு தலைவர் பூங்கோதை வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன், இணை செயலாளர்கள் திங்களூர் கந்தசாமி, ஆர்.பழனிச்சாமி, மாவட்ட அவை தலைவர் கே.ஜி.பொன்னுதுரை, மாவட்ட கழக இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட கழக பொருளாளர் கே.பி.எஸ்.மணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பி.அருணாசலம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மார்ட்டீன் ராஜ், வரதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, டாக்டர் பொன்னுச்சாமி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் முனியப்பன், பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி, செல்வராஜ், விஜயன் ரவி, சக்திவேல், தனசேகரன், ராமசாமி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் பிரகாஷ், விவேக், நொிஞ்சிப்பேட்டை சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story