ஈரோடு வைராபாளையம் கருப்பண்ணசாமி கோவிலில் திருவிழா


ஈரோடு வைராபாளையம் கருப்பண்ணசாமி கோவிலில் திருவிழா
x

ஈரோடு வைராபாளையம் கருப்பண்ணசாமி கோவிலில் திருவிழா நடந்தது.

ஈரோடு

ஈரோடு வைராபாளையம் பகுதியில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story