ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில்ரூ.7 கோடி செலவில் செயற்கை இழை ஓடுதளம்
ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்கியது.
ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்கியது.
ரூ.7 கோடி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு பூப்பந்து, மேஜை பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. மேலும், ஓட்டப்பந்தயம், கால் பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கான மைதானம் உள்ளது. இந்த வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு அரசு பள்ளிக்கூட மாணவிகள் தங்கியிருந்து தடகளம், கால் பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தட்டிக் பைபர்) அமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புல்தரை
செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மைதானம் முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலமாக சமன் செய்யப்பட்டது. செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதற்கான அளவீடு பணிகள் தற்போது நடந்து வருகிறது.
அங்கு சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட்டு, புல்தரையுடன் கூடிய கால் பந்து மைதானம் அமைக்கப்படும் என்றும், இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.