எருமப்பட்டி பகுதியில் தகுதிசான்று இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

எருமப்பட்டி பகுதியில்  தகுதிசான்று இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்  வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x

எருமப்பட்டி பகுதியில் தகுதிசான்று இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

நாமக்கல்

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி, எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் எருமப்பட்டி கைகாட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

மேலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், 18 வயது பூர்த்தி அடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்கள், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 30 வாகன ஓட்டிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தகுதி சான்று இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story