பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்


பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி ஈ.பி.காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடாசலம் (வயது 14). இவன் மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். வெங்கடாசலம் சரியாக படிக்காமலும், பள்ளிக்கு செல்லாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேஷ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் வெங்கடாசலம் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தான். அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story