இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம்


இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம்
x

நெல்லையில் நாளை இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை:

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (ஜூலை) குறை தீர்க்கும் முகாம நாளை நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முகாமில் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 18004251505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை இ.எஸ்.ஐ. துணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story