இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும்
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
அமைச்சர் திடீர் ஆய்வு
கோவையை அடுத்த துடியலூர் விஸ்வநாதபுரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருந்தகம் உள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று மாலை திடீரென நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் வருகை பதிவேடுகளை பார்வையிட்டாா்.
அப்போது விடுமுறை எடுத்திருந்த டாக்டர் ஒருவர், அமைச்சர் ஆய்வு செய்ய வருவதால் பணிக்கு வந்திருந்தார். அவரிடம் அமைச்சர் உங்கள் தேவைக்கு தானே விடுமுறை எடுத்துள்ளீர்கள். முக்கிய வேலையாக இருந்தால் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
மருத்துவ சேவை
அதைத் தொடர்ந்து அவர், அந்த மருந்தகத்துக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வடமாநில தொழிலாளி, அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர், டாக்டர்க ளிடம், அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை அளிக்க உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படு கிறதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காலதாமதம் இன்றி சிகிச்சை
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் குறித்து அறியாமல் சில தொழிலா ளர்கள் சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல் கின்றனர். எனவே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனை குறித்து அறிந்து, அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து தொழிலாளர் மருத்துவமனை, ஆய்வகம், மருந்துகளின் இருப்பு, மருத்துவர்களின் அறைகள், செவிலியர்களின் அறைகள் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தினந்தோறும் வரும் வெளிநோயாளிகளின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் இன்முகத்துடன் பேசி அவர்களுக்கு தேவையான சிகிச்சையை, காலதாமதம் செய்யாமல் விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன்
இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் முக்கியம். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவின்படி அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் காஞ்சனா, அரசு ஈட்டுறுதி மருந்தக மருத்துவ அலுவலர் டாக்டர் பரிமளா ஆகியோர் உடன் இருந்தனர்.