பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஒவிய போட்டி


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஒவிய போட்டி
x

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஒவிய போட்டி நடத்தி, போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.

திருப்பத்தூர்

நாடு முழுவதிலும் பணியின் போது வீர, தீர செயல்புரிந்து உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினரின் வீரதீரம் மற்றும் கடமைகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பறைசாற்றும் விதமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில வளர்ச்சியில் காவல் துறையின் பங்கு எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும், கடமை எனும் தலைப்பில் ஓவியப்போட்டியும் நடைபெற்றது.

ஒவ்வொரு தலைப்பிலும் 50 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story