மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி


மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி
x

‘தமிழ்நாடு நாள்’ தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'தமிழ்நாடு நாள்' தினத்தை முன்னிட்டு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை முன்னிலை வகித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடந்தது.

கட்டுரை போட்டியில் 101 பேரும், பேச்சுப்போட்டியில் 104 பேரும் கலந்து கொண்டனர். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை வேலூர் மாவட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) நாகராஜ் செய்திருந்தார்.


Next Story