கோடைகாலம் முடிந்த பின்னரும் ராமநாதபுரத்தில் விற்பனைக்காக குவியும் தர்பூசணி
கோடைகாலம் முடிந்த பின்னரும் ராமநாதபுரத்தில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோடைகாலம் முடிந்த பின்னரும் ராமநாதபுரத்தில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோடை காலம் போல் வெயில்
தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரையிலும் கோடைகால சீசன் ஆகும். இந்த கோடைகால சீசனில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது தர்பூசணி பழம் தான். இந்த நிலையில் கோடை சீசன் முடிந்து 2 மாதங்கள் முடிந்த பின்னரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. சீசன் முடிந்த பின்னரும் ராமநாதபுரத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. டி பிளாக் அருகே சாலை ஓரத்தில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தர்பூசணி பழங்களை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து பழ வியாபாரி முத்துரத்தினம் கூறும்போது, கோடைகால சீசனில் தர்பூசணி பழம் ஒரு கிலோ ரூ.10-ல் இருந்து 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சீசன் இல்லாததால் தர்பூசணி பழங்களின் வரத்தும் குறைந்து விட்டது.
தர்பூசணி விற்பனை
தற்போது ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த பழங்கள் கல்பாக்கம், திண்டிவனம் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வெயில் வாட்டி வருவதால் தர்பூசணி வியாபாரம் நன்றாகவே உள்ளது. தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்பூசணி பழத்தில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள் என்றார்.