அண்ணாமலை போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் -முத்தரசன் பேட்டி


அண்ணாமலை போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் -முத்தரசன் பேட்டி
x

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

ஈரோடு,

ஒரே நாடு, ஒரே கட்சி என்ற நிலையை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் திட்டமிடுகின்றனர். இது ஜனநாயக விரோதம். இந்த முயற்சியை நிராகரிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு அரசு செயல்படுவதாக பிரதமர் கூறினாலும், 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மத்திய அரசின் நடவடிக்கை, பட்ஜெட்டை பார்த்தால் குறிப்பிட்ட நபர்கள் வளர வகை செய்துள்ளது. ஏழை, எளியோர், விவசாயிகள் வளர்ச்சிக்கு பொருளாதார கொள்கை வழிவகுக்கவில்லை.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக 100 பேர் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மகளிர் ஆணைய தலைவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர்.

தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்

ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி அறிவித்துள்ளார். அவர்கள் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். அ.தி.மு.க. கூட்டணி இன்று முழுமையாக உள்ளதா? என்பதே தெரியவில்லை. அ.தி.மு.க.வே 4 பிரிவாக இருந்து, 4 கருத்தை கூறி வருகின்றனர்.

கூட்டணி தர்மப்படி அவர்கள் கூட்டணியில் த.மா.கா.தான் போட்டியிட வேண்டும். அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story