மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா


மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா
x

திருத்துறைப்பூண்டியில் மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் 60 -க்கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைக்கு வேதாரண்யம் தாலுகாவில் இருந்து இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் கொண்டு வரப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உழவர்சந்தை காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்குகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா நடைபெற்றது. மாரிமுத்து எம்.எல்.ஏ. , நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் மாலை நேர உழவர் சந்தையை திறந்து வைத்தனர். மாலை நேர உழவர் சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் பயறு வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், நாட்டுக்கோழி முட்டை விற்கப்படுகிறது. விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி, வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் மணிகண்டன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சக்திவேல், வடிவுக்கரசி, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story